இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, வீட்டின் பால் கனியில் நின்று, தனது ஒன்றரை வயது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார் ஜெயஸ்ரீ .அப்போது, எதிர்பாராத விதமாக அவர் கையில் வைத்திருந்த குழந்தை திமிறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது. அதனால் அவர் பதறிப்போய் கதறி அழுதார்.
பின்னர், குழந்தையை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்து. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.