கடந்த வருடம் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழக அமைச்சர்கள் சிலர் அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற வெளிநாடுகளுக்கு சென்று தமிழகத்தில் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.
அதன்படி,இங்கிலாந்து நாட்டின் லண்டனுக்கு சென்ற போது அந்நாட்டில் புகழ்பெற்ற கிங்க் மருத்துவமனை நிர்வாகத்துடன் முதல்வர் பழனிசாமி பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்படும் என தகவல் வெளியாகிறது.