அந்த சூழ்நிலையில், திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றனம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்த போது அழகிரி தனது தந்தை தொகுதியான திரூவாரூரில் போட்டியிடுவார் என கூறப்பட்டது.
ஆனால், இதற்கு பிறகு அழகிரியை காணவில்லை. தற்போது தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கபப்ட்டு 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என கூறப்பட்டபோது ஸ்டாலின் இடைத்தேர்தலை சந்திக்க தயார் என கூறினார்.
ஆனால், அழகிரியின் நிலைபாடு என்ன தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா? அல்லது இப்படியே அமைதியார் போய்விடுவாரா? தற்போது வர அமைதி காப்பதற்கான காரணம் என்னவென எந்த ஒரு தகவலும் அவர் தரப்பில் இருந்து கிடைக்காமல் உள்ளது.