எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிய சபாநாயகர் முயன்றபோது அதை திமுகவினர் தடுத்ததோடு, ரகசிய வாக்கெடுப்பு தேவை என கோரி பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் தள்ளுமுள்ளுவிற்கு உள்ளானார். இதனையடுத்து அவை 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
மேற்சட்டை கிழிந்த நிலையில் வெளியே வந்த ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். தெரிந்தோ, தெரியாமல் திமுகவினர் செய்த தவறுக்கு, திமுக சார்ப்பில் மன்னிப்பு கோரினேன். மேலும் சட்டசபையில் தாக்கப்பட்டேன் எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆளுநரை சந்தித்து புகார் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.