தமிழகத்தின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட தொகுதி விராலிமலை. அங்கு காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக மற்றும் அதிமுக முகவர்கள் இடையே வாக்குவாதம் நிகழ்ந்ததால் அவ்வப்போது வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது 7 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது மீண்டும் மோதல் எழவே வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.