இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் 5 தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்க தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.