சமீப காலமாகவே ரயிலில் பயணம் செய்கின்ற இளைஞர்கள் சாகசம் என்ற பெயரில் ரயில் படிக்கட்டுகளில் தொங்குவதும், கம்பியை பிடித்து தலையை வெளியே காட்டுவதுமாக செய்து வருகின்றனர். இதன் விபரீதத்தை உணராமல் இப்படிச் செய்வதால், பலர் உயிரிழக்கும் சூழ்நிலையும், விபத்துகளும் நேர்கின்றன.
ஓடும் ரயிலில் வித்தை காண்பிப்பதாகவும், துணிச்சலின் அடையாளமகவும் செய்கின்ற செயல் துணிச்சல் கிடையாது. உங்கள் வாழ்க்கை விலைமதிப்பற்றது, அதை ஆபத்தில் வைக்க வேண்டாம்.