வி.ஏ.ஓ. தேர்வு: நுழைவுச்சீட்டு தரவிறக்கம் செய்யலாம் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

புதன், 4 ஜூன் 2014 (17:18 IST)
கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
இதற்கான அறிவிப்பை தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வி.சோபனா (செவ்வாய் கிழமை) அறிவித்தார்.
 
நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்