இன்று ஒரேநாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி: முகாம் தொடரும் என அறிவிப்பு
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (18:36 IST)
சென்னை, கோவை, திருப்பூர், தஞ்சை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஒரேநாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.
இயல்பை விட மெகா தடுப்பூசி முகாமில் 3 மடங்கு அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மக்களின் ஆதரவு இருப்பதால் தொடர்ந்து தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் வரும் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 24.21 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.