வீடு இல்லாத மக்களுக்கு தடுப்பூசி .... தமிழக அரசு

புதன், 26 மே 2021 (15:52 IST)
வீடு இல்லாத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சமீபத்தில் புதிய வகை நோய் கருப்பு பூஞ்ஞை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
 
இதைத்தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
 
இந்நிலையில்,  தமிழ் சினிமா நடிகர்கள்  மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணவு ஏற்படுத்தி வருகின்றனர்.
 
இன்று தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவித்துள்ளது. இது நீட்டிக்கப்படலாம் என்ற கருத்து நிலகிறது.
 
இந்நிலையில், தமிழகத்தில் வீடு இல்லாத மக்களுக்கு செல்லுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.
 
மேலும், தொற்று பாதிக்கும் என்ற அபாயமுள்ள வீடு இல்லாத மக்களைக் கணக்கெடுத்து, அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அதிக மக்கள் பயன்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்