லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே.. ஊழல் லிஸ்ட் போடும் உதயநிதி! – ட்ரெண்டிங் செய்யும் ஐடி விங்!

புதன், 9 டிசம்பர் 2020 (17:10 IST)
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக இடையே ஊழல் குறித்து எழுந்துள்ள வாக்குவாதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கையும், அதிமுக ஆ.ராசாவின் 2ஜி வழக்கையும் பற்றி தொடர்ந்து பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று தன் மீது ஊழல் புகார் இல்லை என ஆ.ராசா விளக்கமளித்ததுடன், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிலையில், அதிமுகவினர் திமுகவின் ஊழல்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “முட்டை ஊழல் - குட்கா ஊழல் - நெடுஞ்சாலை ஊழல் - டெண்டர் ஊழல் - போலி நிறுவன ஊழல் - மணல் குவாரி ஊழல்- மின்சார கொள்முதல் ஊழல்- ஆவின் ஊழல் - நெல் கொள்முதல் ஊழல் - கொரோனாவிலும் ஊழல்... என சத்துணவு முதல் சகலத்திலும் ஊழல்மயப்பட்டுப்போன அடிமைகளை விரட்டுவோம்.” என கூறி #அதிமுகஊழல்அரசு என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்துள்ளார்.

இதை திமுகவினரும் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், கிடைத்த வார்த்தைகள் பின்னால் எல்லாம் ஊழல் என சேர்த்து உதயநிதி பதிவிட்டுள்ளார் என அதிமுக வட்டாரத்தில் கண்டனங்களும் தெரிவித்து வருகிறார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்