டிவிஎஸ் நிறுவனத்தின் அங்கமான டிவிஎஸ் லூகாஸ், ஸ்பேர் ஸ்பார்ட்ஸ் தயாரிப்பில் முக்கியப் பங்காற்றி வருகிறது. சென்னையின் , பாடி பகுதியில் இதன் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிறுவனம் வியாபார மந்தநிலை காரணமாக ஏற்கெனவே சில நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்திருந்தது. இப்போது இதன் மூன்று பிரிவு ஊழியர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் இரன்டு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.
வாகன உற்பத்திக்கான செலவுகள் அதிகரிப்பு, உதிரிப்பாகங்கள் இறக்குமதிக்கான வரி உயர்வு, அதிக ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களாக வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே டிவிஎஸ் நிறுவனத்தின் வேலை நாட்கள் குறைப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வியாபார நிலைமை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து ஊழியர்களுக்குப் பின்னர் அறிவிக்கப்படும். ஒருவேளை மந்த நிலை தொடர்ந்தால் ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடலாம் என்ற அச்சம் நிலவுகிறது.