தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு கடந்த ஞாயிறு அன்று நடந்த நிலையில் மது அருந்திவிட்டு யாரும் மாநாட்டு திடலுக்குள் வரக்கூடாது என்று விஜய் அறிவுரை செய்திருந்தார்,. இருப்பினும் மாநாட்டு மேடையில் சிலர் மது அருந்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 195 மதுக்கடைகள் இயங்கும் நிலையில், சாதாரண நாட்களில் 4 கோடி ரூபாய் வரை மது விற்பனையாகி வருகிறது. ஆனால் த.வெ.க மாநாடு விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற நிலையில், அன்றைய தினம் மது விற்பனை அதிகரித்துள்ளது
கடந்த 26ஆம் தேதி 4 கோடியே 69 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில், மாநாடு நடைபெற்ற தினத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, சுமார் 5 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.