அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் சென்னை பெரம்பூரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு,பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
தமிழக வணிகர்களின் பாதுகாவலராகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் திரு.வெள்ளையன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு.வெள்ளையன் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் சக வணிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.