இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13 ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனிடையே பொங்கல் பண்டிகை வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது என டிடிவி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தலைநகரில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.