போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 7000 கோடி ரூபாய் நிலுவைத்தொகையாக உள்ளது. இந்த நிலுவைத்தொகை, பஞ்சப்படி, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்றவற்றை பல காலமாக வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் வரும் மே 15-ஆம் தேதி (நாளை) முதல் ஈடுபட போவதாக அறிவித்தது.
இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் போக்குவரத்து முடங்கி, தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மேலும் அலுவலகம் செல்வோர், கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா செல்வோர் என அனைவரும் பாதிக்கப்படுவர். இன்று நள்ளிரவு முதலே பஸ்கள் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. பல இடங்களில் வேலை நிறுத்தம் தற்போதே தொடங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கி தமிழகமே ஸ்தம்பிக்கும் என கூறப்படுகிறது.