இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகவில் உள்ள தெருச் சண்டையை மறந்து திமுக மீது எடப்பாடி பழனிசாமி பாய்கிறார் என்று சொந்த மாவட்டமான சேலத்துக்கு சென்றுவிட்டு சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை என்றும் சட்டமன்றத்தில் அந்த மாவட்டத்தில் வென்றது போல் மற்ற மாவட்டத்தில் வென்று இருந்தால் அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அதிமுக மண்ணை கவ்வியது என்பதை அவர் மறந்துவிட்டார். திமுக சேலம் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் கோட்டையாக உள்ளது என்றும் எடப்பாடிபழனிசாமி இனி கோட்டை கனவு காண வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிஆர் பாலுவின் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது