மத்திய பாஜக அரசால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென திமுக கூறி வந்தது. இதுவே அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டது.
தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமூக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நாளை மறுதாள் தீர்மானம் கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.