சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்திருந்தாலும் மத்திய, மாநில அரசுகள் வரியினை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தலாம். ஆனால் இரு அரசுகளும் இதனை செய்ய மறுப்பதால் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 12 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 6 காசுகள் அதிகரித்து விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.