கேரளாவில் 20 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!
வெள்ளி, 12 நவம்பர் 2021 (19:42 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்வரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 7 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6674 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 7022 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 59 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 35,511 என்றும் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,147 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 68,805 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது