முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தது தொடர்பான வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், அவர் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் மனு தாக்கல் செய்தார், ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின்னர், உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனுவின் மீதான விசாரணை சில மாதங்கள் கடந்தது.
இதை அடுத்து, இரு தரப்பினரும் வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள் இன்று தீர்ப்பை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இன்று காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வழங்க உள்ள நிலையில், இந்த தீர்ப்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? சிறைவாசம் முடிவுக்கு வருமா? என்பது தெரியவரும்.