டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.!

Senthil Velan

திங்கள், 2 செப்டம்பர் 2024 (15:25 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதல் நிலைத்தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.   
 
துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 90 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 1.59 லட்சம் பேர் எழுதினர்.  இந்நிலையில், முதல்நிலை தேர்விற்கான முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு எழுதியோர் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளமான Www.tnpsc.gov.in இணையதளத்தில் காணலாம்.
 
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற இருப்பவர்கள் அடுத்து நடைபெறும் முதன்மைத் தேர்வை எழுத தகுதி பெறுவார்கள். தகுதி பெற்ற தேர்வர்கள் செப்டம்பர் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை ரூ.200 கட்டணம் செலுத்தி ஆன்லைன் வழியாக சான்றிதழ்களை சமர்பிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.  


ALSO READ: 100 கோடி மோசடி வழக்கில் எம்.எல்.ஏ., கைது.! அமலாக்கத்துறை அதிரடி..!!
 
தகுதி பெற்ற தேர்வர்களுக்கு  குரூப் 1 முதன்மை தேர்வு டிசம்பர்  10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி  அறிவித்துள்து. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்