கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண்: தமிழ்நாடு அரசு

வியாழன், 12 அக்டோபர் 2023 (10:25 IST)
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில் ஊக்க மதிப்பெண் அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா கேர் மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என்றும், 6 முதல் 12 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண், 12 முதல் 18  மாதம்  வரை பணியாற்றியவர்களுக்கு 3  மதிப்பெண் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் 18 முதல் 24  மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 4  மதிப்பெண், 24 மாதங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

2250 கிராம சுகாதார செவிலியர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்