கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 நாட்கள் முழு ஊரடங்கும், சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.