திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்: சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு..!

வியாழன், 26 அக்டோபர் 2023 (15:57 IST)
திருவண்ணாமலை அண்ணாமலையர் கோயில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 28, 29ம் தேதிகளில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
வரும் 28ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் அதிகாலை 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.  அதேபோல் மறுநாள் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 3.05  மணிக்கு மறுமார்க்கமாக கிளம்பும் இந்த ரயில் சென்னைக்கு 9.05 மணிக்கு சென்றடையும்.
 
இந்த ரயில் வேலூர், காணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம், துரிஞ்சபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்