நேற்று ஒரே நாளில் சென்னையைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவருக்கும், மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை திருப்பூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் மூவரும் தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த 58 வயது நபருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஏனெனில் இவர் எந்த வெளிநாட்டுக்கும் வெளி மாநிலங்களுக்கும் செல்லாதவர் என்றும் வெளிமாநிலத்தில் உள்ளவர்களுடனும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும் எந்தவித தொடர்பும் இல்லாத ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு எப்படி கொரோனா பரவியது என்று மர்மமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்