ஒத்த செருப்பு இது படம் அல்ல, பக்தர் ஒருவர் காணிக்கையாக படைத்த நிகழ்ச்சி கரூரில் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது - கரூரில் பெருமாள் சுவாமிக்கு ஒத்த செருப்பு காணிக்கையாக வழங்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த வருடமும் சுவாமி தங்கள் கனவில் வந்து இந்த அளவுடைய ஒத்த செருப்பு செய்து காணிக்கையாக செலுத்த வேண்டும் என்று சொன்னார். அதன் அடிப்படையில் பெருமாளின் பாதத்தினை தோல் எடுத்து ஒத்த பாதம் செருப்பு 70 இன்ச் அளவிற்கு செய்து அதை ஊர்வலமாக கரூர் நகரின் முக்கியவீதிகளின் வழியாகவும், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் மற்றும் பல்வேறு ஆலயங்களின் வழியாக எடுத்து கொண்டு சென்று தாந்தோன்றிமலை பெருமாள் ஆலயத்தில் அவர் பாதத்தில் சமர்ப்பித்து வேண்டுதலை நிறைவேற்றினார்.
மேலும், இந்த காணிக்கை செலுத்தியதோடு, பெருமாள் ஆசிர்வாதம் பெற்றார். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியது.