இன்று மாலை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவதை அடுத்து, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளதாகவும், இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இன்று மாலை 6:00 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த தீபத்தை தரிசனம் செய்ய சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் 14,000 அதிகமான போலீசார் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.