அவரது இந்த அறிவிப்பை கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஏற்றுக் கொண்ட தாகவே கருதப்பட்டன. இந்த நிலையில் திடீரென திருமாவளவன் தனது டுவிட்டரில் தமிழ்நாடு நாள் தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்துக்கட்சித் தலைவர்கள், எல்லைமீட்பு போராளிகள், இன உணர்வாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் போன்றோரை அழைத்துக் கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது. மாண்புமிகு முதல்வருக்கு @mkstalin எமது வேண்டுகோளாக முன்வைக்கிறோம் என பதிவு செய்துள்ளார்.