இந்நிலையில் மதுரையில் போக்குவரத்து தொழிலாளர்கள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு எதிராக தெர்மகோல் போராட்டம் நடத்தினர். நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்ததையடுத்து மதுரை பழங்காநத்தம் போக்குவரத்து பணிமனைக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அடியாட்களை அனுப்பி மிரட்டி, அனுபவம் இல்லாத ஓட்டுனர்களை வைத்து அரசு பேருந்துகளை இயக்க முயற்சித்தார் என கூறப்படுகிறது.
இதனையடுத்து செல்லூர் ராஜுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போக்குவரத்து ஊழியர்கள் தெர்மக்கோல்களை கைகளில் ஏந்தி போராட்டம் நடத்தினர். இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும் போது, நாங்கள் நேர்மையான கோரிக்கைகளுடன் போராடி வருகிறோம் ஆனால் அமைச்சர் செல்லூர் ராஜூ அடியாட்களை பணிமனைக்குள் அனுப்பி, அனுபவமில்லாத ஓட்டுனர்கள், ஆட்டோ, வேன் மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர்களை வைத்து குறைந்த அளவிலான பேருந்துகளை இயக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.