10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு ரேங்க் இனிமேல் கிடையாது: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
வியாழன், 11 மே 2017 (19:01 IST)
தமிழகத்தில் நாளை 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இனிமேல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிகளில் ரேங்கிங் முறை இருக்காது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்ட்டையன் அறிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவில் புதுமையாக, தேர்வு எழுதிய மாணவர் அல்லது அவர்களது பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவை தனித்தனியாக ஒவ்வொரு மாணவருக்கும் அனுப்ப முடிவு செய்துள்ளது தமிழக அரசு.
இந்நிலையில் ரேங்கிங் முறையையும் ஒழித்துள்ளது அரசு. அதற்கு பதிலாக சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ முறையில் எழுதும் மாணவர்களின் தேர்வு முறையை போலவே முடிவுகள் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மேலும் மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.