அடுத்த 12 மணி நேரத்திற்கு கடல் கொந்தளிக்கும்: வானிலை ஆய்வு மையம்

வியாழன், 11 நவம்பர் 2021 (23:53 IST)
அடுத்த 12 மணி நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று கரையை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கரையை கடந்த தாழ்வு மண்டலம் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்திற்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் அதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்