தமிழக பட்ஜெட்: மொத்த பற்றாக்குறை எவ்வளவு?

வியாழன், 15 மார்ச் 2018 (11:02 IST)
துணைமுதல்வர் மற்றும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்றுமுன் சட்டமன்றத்தில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த ஆண்டின் பட்ஜெட்டில் ரூ.23 ஆயிரத்து 176 கோடி பற்றாக்குறை என்று நிதியமைச்சர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதாவது இந்த ஆண்டின் மொத்த வருவாய் ரூ.1.81 லட்சம் கோடி என்றும், செலவு ரூ.2.04 லட்சம் கோடி என்றும் அதனால் ஏற்படும் பற்றாக்குறை ரூ.23 ஆயிரத்து 176 கோடி என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த பற்றாக்குறையை போக்க ரூ1,43,962 கோடி கடன் பெற தமிழக அரசுதிட்டமிட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

018-19ல் அரசின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடியாக இருக்கும்
தமிழகத்தின் பொருளாதாரம் 9% ஆக உயரும்
தமிழகத்தின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடி
தமிழக அரசின் செலவு ரூ2.04 லட்சம் கோடி
மலை சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ75 கோடி
நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ300 கோடி ஒதுக்கீடு
வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிப்பு
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி
வேளாண் துறைக்கு ரூ.8,916.25 கோடி ஒதுக்கீடு
காவல்துறைக்கு ரூ.7,877 கோடி ஒதுக்கீடு
காவல்துறைக்காக 35 கட்டடங்கள், 15 காவல் நிலையங்கள், 543 குடியிருப்புகள் கட்டப்படும்
நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி ரூ.1500-லிருந்து, ரூ.2 ஆயிரமாக உயர்வு
தஞ்சை தமிழ் பல்கலை.யில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்பட்டு, ஆண்டு மானியமாக ரூ.2 கோடி



 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்