நெருங்கி வரும் மிக்ஜாம்; துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (10:08 IST)
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் நெருங்கி வரும் நிலையில் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.



வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற நிலையில் அதற்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டது. இந்த புயல் எதிர்வரும் 4ம் தேதி சென்னை – ஆந்திரா இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. பின்னர் புயலில் திசை மாறியதால் 5ம் தேதி ஆந்திராவில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. புயல் நெருங்கி வரும் நிலையில் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், நாகப்பட்டிணம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்