அதன்படி கடந்த 5 நாட்களுக்கு முன்னர்தான் வசந்தபிரியாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதனால் விரக்தியில் இருந்த நந்தகுமார், வசந்தபிரியாவை சந்திக்க வேண்டும் என கெஞ்சியுள்ளார். இதனால் மனமிறங்கிய வசந்தபிரியா பள்ளி முடிந்ததும் நந்தகுமாருடன் பைக்கில் சென்றுள்ளார்.
ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் ஓடிய வந்த வசந்தபிரியா நிலைதடுமாறி விழுந்து துடிதுடிக்க உயிரை விட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வசந்தபிரியாவின் உடலை கைப்பற்றி பின்னர் மேற்கொண்ட விசாரணையில், சிசிடிவி பதிவுகள் மூலம் நந்தகுமார்தான் கொலை செய்தார் என கண்டுபிடித்து இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.