நம்ம ஊரில் காப்பி அடிப்பதற்குத் தடை விதிப்பது போன்று, எல்லா நாடுகளிலும் இது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க ஒரு ஆசிரியர் மேற்கொண்ட செயல் தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.
அதாவது எந்த ஆசிரியருமே, மாணவர்கள் காப்பியடிப்பதை விரும்பமாட்டார்கள். தேர்வு அறையிலும் கூட கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி யாரும் காப்பி அடிக்க விடமாட்டார்கள். இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள்.
காப்பி அடிப்பதைத் தடுக்க மாணவர்களின் தலையில் ஒரு அட்டைப் பெட்டியை மாட்டி அதன் நடுவே , கண்கள் பார்த்து எழுதுவதற்காக ஓட்டை போட்டுள்ளார். இந்த செயல் அனைவராலும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது. இதை ஒருவர் போட்டோ பிடித்து வெளியிட தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகின்றது.