முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். இதனையடுத்து தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தமிழகத்தில் 7 நாட்கள் துக்கம் அணுசரிக்கப்படுகிறது. கேரளா, புதுச்சேரி, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணமடைந்த செய்தி வெளியானதும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் பார்களுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.