பொட்டு சுரேஷ் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டியை அவருடைய செல்போன் பேச்சு மூலம், மும்பையில் தமிழக காவல் துறை கைது செய்தது. இந்நிலையில், பொட்டு சுரேஷ் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக ஸ்டாலினை சந்தித்தது பற்றி தனது வாக்குமூலத்தில் தெரிவிப்பாரா என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், இந்த கொலை நடப்பதற்கு முன்பு, அட்டாக் பாண்டி மு.க. அழகிரியிடமிருந்து விலகி ஸ்டாலின் அணிக்கு மாறியிருந்தார். அதுமட்டுமல்லாது பொட்டு சுரேஷ் கொலைச் சம்பவத்துக்கு முன்பு, சென்னை சென்று மு.க.ஸ்டாலினை அட்டாக் பாண்டி சந்தித்தது பற்றி ஏற்கன்வே அட்டாக்கின் உறவினர் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். அதுதொடர்பாக, அட்டாக் பாண்டியிடம் வாக்குமூலம் வாங்கவும் தமிழக காவல் துறை முடிவு செய்துள்ளனர்.