உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக தோன்றியுள்ள குரங்கு அம்மை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், தூத்துக்குடியில் உள்ள விமான நிலையங்களில் குரங்கு அம்மை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.