தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்காக குடும்ப அட்டை மூலமாக விலையில்லா முகக்கவசங்களை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.