தமிழகத்தில் ஆனைமலை மற்றும் முதுமலையில் புலிகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள புலிகளை காக்கவும், புலிகள் இனத்தை அதிகரிக்கவும் Project tiger திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு ரூ.2.53 கோடியும், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு ரூ.5.26 கோடியும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.