தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இபாஸ் நடைமுறை அமலில் இருந்து வந்த நிலையில் நாளை முதல் இபாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இபாஸ் நடைமுறையால் மக்கள் அதிகமாக போக்குவரத்து செய்யாமல் இருந்த நிலையில் இ-பாஸ் ரத்தால் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 21 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 21 சுங்கசாவடிகளில் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுங்க கட்டண உயர்வுக்கு கனிமொழி எம்பி உள்ளிட்ட எதிர்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.