காங்கிரஸின் தோல்விக்குப் பொறுப்பேற்று பல மாநிலத் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து இன்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது. இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியைத் தான் ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் அவரது ராஜினாமாவை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது.
ராகுலின் ராஜினாமாவை ஏற்காதது குறித்து காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பியபோது ‘ காங்கிரஸின் ராஜினாமாவை ஏற்றால் தென்னிந்தியாவில் பல காங்கிரஸ் தலைவர்கள் தற்கொலை செய்துகொள்வர்’ எனப் பதில் அளித்தார். இது குறித்துப் பலவிதமான கருத்துகள், விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் டிவிட்டரில் ‘ராஜிவ்காந்தி தமிழ் மண்ணில் குண்டு வெடித்து மக்கள் பதைபதைக்கும் வண்ணம் இறந்தபோது ஏன் ஒரு காங்கிரஸ்தலைவர் கூட அவர் அருகில் இல்லை என்று சிதம்பர ரகசியத்தைப் பற்றி? அப்போதே விவாதம் நடந்தது. இப்போது ஏன் தற்கொலை நாடகம்? காங். வழக்கமான ராஜினாமா நாடகத்தில் கிளைமாக்ஸ் காட்சி? தற்கொலை சீன் உபயம் திமுக?’ என கேலி செய்துள்ளார்.