கருணாநிதியை புகழ்ந்து ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தமிழிசை சௌந்தரராஜன்

வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (16:10 IST)
திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் நீட் தேர்வை ஆதரித்து இருப்பார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.


 

 
அனிதா மரணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனிதா மரணத்துக்கு நீதி கோரியும் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வை எதிர்த்து போராடுபவர்களுக்கு எதிராக பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்.
 
நீட் தேர்வை ஆதரித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-
 
திமுக எத்தனை போராட்டம் நடத்தினாலும் அதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம். திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை முறியடிபோம். திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் நீட் தேர்வை அனுமதித்து இருப்பார் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்