இந்நிலையில் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்தலாம் என தமிழக அரசு மற்றும் இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து இன்று மனு மீதான விசாரணையில் இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால் தமிழில் மட்டும் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது வரவேற்கத்தக்கது. ஆகம விதிகளின்படி கும்பாஷேகம் நடத்த வேண்டும் என்பது அனைவரது விருப்பம் என தெரிவித்தார்.
மேலும்,குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து டிஎ.பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும். 2021 ஏப்ரல் மேக்கு பிறகு தமிழக அரசின் ஊழல்கள் வெளியே வரத் தொடங்கும் என தெரிவித்தார்.