இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர், "தேமுதிக பொருத்தவரை தாய் மொழியை மட்டுமின்றி, அனைத்து மொழிகளையும் காக்க வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. அனைத்து கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான எங்களுக்கும் முன்பே அழைப்பு வந்துவிட்டது. எனவே, உறுதியாக அந்த கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்," என்று கூறினார்.
ஏற்கனவே அதிமுகவும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என்று அறிவித்த நிலையில், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில், எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.