அரியலூரில் நகராட்சி அலுவலகத்தில் ஒருவர், உறவினரின் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவரிடம் வட்டாட்சியர் ஐநூறு ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அவர் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ரசாயணம் தடவிய நோட்டை வட்டாட்சியரிடம் கொடுத்த போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.