இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் அவரை தேடி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் கடந்த சனிக்கிழமை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் சற்றுமுன் பேட்டியளித்த எஸ்.வி,சேகர் தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், சென்னையில் தான் இருப்பதாகவும் தமிழக காவல்துறை துணிவிருந்தால் தன்னை கைது செய்து பார்க்கப்படும் என்றும் சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை ஏற்று எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்