அதில், தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வர வாய்ப்பு இருப்பதாக 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இரண்டாம் இடத்தில் ரஜினிகாந்தும்(21%), மூன்றாம் இடத்தில் கமல்ஹாசனும்(13%), நான்காம் இடத்தில் தினகரனும்(10%) உள்ளனர்.
மேலும் இந்த கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் சட்டசபை கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலாக 58.8 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் வருவதற்கும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் 30.2 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.