தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஜனவரி மாதம் வரும் பொங்கல் விழாவிற்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் செய்ய தேவையான அரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி போன்ற பொருட்கள் அடங்கிய பொங்கல் பையும், ரொக்க பணமும் வழங்குவது வழக்கம். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது பொங்கல் பை மற்றும் ரொக்கம் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த தடை உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், மற்ற மாவட்டங்களில் பொங்கல் பை வழங்க தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.